Director Hari Admitted in Hospital

பிரபல திரைப்பட இயக்குனர் ஹரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Director Hari Admitted in Hospital : சினிமா இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரி. அதிரடியான ஆக்ஷன் படங்களை இயக்குவது கைதேர்ந்தவர். சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பல மெகா ஹிட் படங்களை கொடுத்தவர்.

இவர் தற்போது நடிகர் அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அவருடன் பணியாற்றிய ஒருவருக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இப்படியான நிலையில் இயக்குனர் ஹரி கடும் காய்ச்சலால் பழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இயக்குனர் ஹரிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.