Director Deekay Blast Doctor Who Request to Vijay

விளம்பரம் தேடுகிறார் என விஜய்க்கு கடிதம் எழுதிய மருத்துவரை தாக்கி பேசியுள்ளார் இயக்குனர் ஒருவர்.

Director Deekay Blast Doctor Who Request to Vijay : சினிமாவில் நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த வருடம் ஏப்ரல் மாதமே திரைக்கு வர இருந்தது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக படம் ரிலீஸ் ஆகாததால் இந்தப் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

தளபதி விஜய் முதல்வரை நேரில் சந்தித்து 100 சதவீத இருக்கைக்கு அனுமதி தருமாறு கோரிக்கை வைத்திருந்தார். தமிழக அரசு இதற்கு அனுமதி அளித்த நிலையில் மீண்டும் பின்வாங்கியது. வெற்றி பழையபடி 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவு தொடரும் என தெரிவித்தது.

ஒரு சதவீத இருக்கைக்கு தமிழக அரசின் அனுமதி அளித்ததும் மருத்துவர் ஒருவர் விஜய்க்கு கோரிக்கை வைத்து கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்த கடிதத்திற்கு ஆதரவு எதிர்ப்பு என இரண்டும் எழுந்தது.

இந்த நிலையில் காட்டேரி படத்தின் இயக்குனர் டிகே அந்த மருத்துவரை விமர்சனம் செய்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஏசி பார் கிளப் போன்றவற்றை திறந்தபோது என்ன செய்து கொண்டிருந்தார் அந்த மருத்துவர். அப்போது அவருக்கு கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றவில்லையா.

சினிமா விமர்சனம் செய்து பேசினால் 15 நிமிடத்தில் பிரபலம் ஆகி விடலாம் என்பதற்காகத்தான் அவர் அந்த பதிவை பதிவிட்டு இருப்பார் என விமர்சித்துள்ளார்.

இயக்குனரின் இந்த பதிவுக்கு சர்ச்சை கிளம்பியுள்ளது. கொரானாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்களின் உழைப்பை கொச்சைப்படுத்தும் வகையில் அவர் பேசி இருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/deekaydirector/status/1346679220789936129?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.