ஆழ்துளை கிணற்றில் விழுந்து காப்பாற்ற முடியாமல் குழந்தை சிறுவன் சுர்ஜித் மரணமடைந்த விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை சுர்ஜித்தின் இழப்பிற்கு தமிழகமே இரங்கல் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், நடிகரும், இயக்குனருமான் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

விழிப்புணர்வின்
விதையானாய்..
விடைகொடுக்கக்கூட
நாங்கள்
அருகதையற்றவர்கள்
முடிந்தால்
மன்னித்துவிடு
இம்மண்ணில் பிறப்பித்த
கடவுளை…..

என குறிப்பிட்டுள்ளார்.