Director Bala Upcomming Movie

17 வருடங்களுக்குப் பிறகு முன்னணி நடிகருடன் பாலா கூட்டணி சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Director Bala Upcomming Movie : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலா. தனக்கென ஒரு தனி ஸ்டைலை படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் இடம் பிடித்தவர்.

இவர் இறுதியாக துருவ் விக்ரமை வைத்து வர்மா என்ற படத்தை இயக்கினார். தனக்கு ரீமேக் படங்களை இயக்க வராது என கூறியும் விக்ரமின் வேண்டுகோளுக்கு இணங்க பாலா இந்த படத்தை இயக்கினார்.

ஆனால் E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை அப்படியே கிடப்பில் தூக்கிப்போட்டது. இதனால் பாலாவிற்கு பெரும் களங்கம் ஏற்பட்டு விட்டதாக பேசப்பட்டது.

தமிழ் சினிமாவில் பாலாவின் பயணம் அவ்வளவுதான் என பேச்சுக்கள் கிளம்பத் தொடங்கின. இவற்றை எல்லாம் முறியடிக்கும் வகையில் பாலா அடுத்ததாக சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவுடன் பிதாமகன் மற்றும் நந்தா ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ள பாலா 17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் கூட்டணி சேர உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் அதர்வா மற்றும் ஆரிய ஆகியோரும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.