Director and Producer Details of thala 61

தல 61 படத்தின் அதிரடியான அப்டேட் இணையத்தில் கசிந்துள்ளது.

Director and Producer Details of thala 61 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க எச் வினோத் இப்படத்தினை இயக்கி வருகிறார்.

படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஒன்றரை வருடங்களாக காத்துக் கொண்டிருந்த நிலையில் அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க தற்போது தல 61 படம் பற்றி தெரிய வந்துள்ளது. அதாவது தல 61 படத்தினையும் எச் வினோத் தான் இயக்க போவதாக பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தினையும் போனி கபூர் தான் தயாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.