Dhruv With Rahman and Shankar Son

விக்ரம் ஏ ஆர் ரகுமான் மற்றும் ஷங்கர் ஆகியோரின் மகன்கள் மூவரும் ஒன்றாக எடுத்துக்கண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dhruv With Rahman and Shankar Son : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவருடைய மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி இருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தன்னுடைய அப்பா விக்ரமுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் துருவ் விக்ரம் ஏ ஆர் ரகுமானின் மகன் மற்றும் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. புகைப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் மூவரும் ஒரே படத்தில் நடிக்கிறார்களா? இல்லை சங்கர் மகன் இயக்க ஏ ஆர் ரகுமான் மகன் இசையமைக்க துருவ் விக்ரம் நடிக்கிறாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

https://www.instagram.com/p/CJA0jgCMDg7/?igshid=1vobzt37tqh7v