Dhruv Vikram With Dad Photos

முரட்டுத்தனமான லுக்கில் அப்பா விக்ரமுடன் துருவ் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.

Dhruv Vikram With Dad Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவருடைய மகனான துருவ் விக்ரம் தமிழ்த் திரையுலகில் ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

இந்த படத்தினை தொடர்ந்து இவர் அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் தன்னுடைய அப்பா விக்ரமுடன் இணைந்து நடிக்க உள்ளார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படங்களுக்காக துருவ் அருமையாக ஒர்க் அவுட் செய்து தமிழுக்கு உடலை பிட்டாக மாற்றி வருகிறார். அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முரட்டுத்தனமான லுக்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்துள்ளார்.