Dhruv Vikram Upcoming Movie Update

துருவ் விக்ரமின் மூன்றாவது திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Dhruv Vikram Upcoming Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். படத்துக்கு படம் மாறுபட்ட வேடம், மாறுபட்ட நடிப்பு என அனைவரையும் கவர்ந்த நடிகர். இவருடைய ஒரே மகனான துருவ் விக்ரம் பாலா இயக்கத்தில் உருவாகி இருந்த வர்மா படம் மூலமாக திரையுலகில் அறிமுகமாக இருந்தார்.

ஆனால் சில காரணங்களால் இந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு மீண்டும் ஆதித்ய வர்மா என்ற பெயரில் வேறு ஒரு இயக்குனரை கொண்டு படமாக்கப்பட்டு வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

துருவ் விக்ரமின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. புலிக்கு பிறந்தது பூனையாகுமா என பலரும் துருவ்வின் நடிப்பை பாராட்டினார்கள்.

துருவ் அடுத்ததாக விக்ரமுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இது இவருக்கு இரண்டாவது திரைப்படம்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து துருவ் விக்ரம் பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தை பா ரஞ்சித் தயாரிக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.