Dhruv Vikram Role in Maari Selvaraj Movie

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் துருவ் விக்ரம் ரோல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Dhruv Vikram Role in Maari Selvaraj Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். படத்திற்கு படம் மாறுபட்ட நடிப்பை மாறுபட்ட கதாபாத்திரத்தையும் வெளிப்படுத்தி வரும் இவருடைய மகன் துருவ் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலமாக திரையுலகில் நாயகனாக அறிமுகமானார்.

முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தன்னுடைய அப்பா விக்ரமுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மூன்றாவது படமாக பா ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இப்படத்தில் விக்ரம் கபடி வீரர் நடிக்க உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

ஆதித்ய வர்மா திரைப்படத்தில் ஹாக்கி மீது ஆர்வம் கொண்டவராக நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது கபடி வீரராக நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.