Dhruv Vikram Joins with Maari Selvaraj

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரமின் அடுத்த படம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Dhruv Vikram Joins with Maari Selvaraj : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவருடைய மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்.

முதல் பட வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தன் அப்பா விக்ரமுடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது அடுத்த படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால் சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.