Dheena Slams DD
Dheena Slams DD

விஜய் டிவி டிடியை ஓங்கி அறைந்துள்ளார் தீனா.

Dheena Slams DD : தமிழ் சின்னத்திரையின் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று விஜய் டிவி. இந்த நிகழ்ச்சியின் மூலமாக திரையுலகில் பிரபலமானவர்கள் என பலர் உண்டு.

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடங்கி மூன்று படங்களிலும் நடித்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

அவரைப் போலவே இந்த டிவி நிகழ்ச்சியில் காமெடி செய்து பிரபலமானவர் தீனா. இவர் கலக்கப்போவது யாரு என்ற சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து என்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

தீனா படத்தை தவற விட்ட முன்னணி நடிகர்.. அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்த அஜித் – தவற விட்டது யார் தெரியுமா?

இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் KPY புகழ் கலந்து கொண்ட போது தீனா அவரை அடிப்பது போல கன்னத்தில் ஒரு அடி பளாரென கொடுத்து விடுகிறார்.

தற்போது இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் தாக்கப்பட்டார் டிவி என நகைச்சுவையாக கமெண்ட் அடித்துள்ளார்.