Dharsha Gupta in Ruthrathandavam Movie

குக் வித் கோமாளி தர்ஷா குப்தாவின் புதிய திரைப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஷாக் கொடுத்துள்ளன.

Dharsha Gupta in Ruthrathandavam Movie : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் தர்ஷா குப்தா.

இந்த சீரியல் மட்டும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று சில வாரங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் தல அஜித்தின் மனைவி ஷாலினியின் தம்பியான ரிச்சர்ட்டுடன் இணைந்து ருத்ரதண்டவம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளது. இது குறித்து சில புகைப்படங்களை வெளியிட்டு தான் படப்பிடிப்பில் கலந்துகொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார் தர்ஷா குப்தா.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள்தான் ரசிகர்களுக்கு பெரும் ஷாக் கொடுத்துள்ளன. அதாவது இந்த திரைப்படத்தில் திருமணமாகி நிறைமாத கர்ப்பிணியாக நடித்துவருகிறார் தர்ஷா குப்தா.

இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது போன்ற புகைப்படங்களை தான் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க