Dharala Prabhu Movie Review
கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், விவேக், தன்யா ஹாப் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தாராள பிரபு.

Dharala Prabhu Movie Review : 

ஹிந்தியில் வெளியாகி ஹிட்டடித்த விக்கி டோனர் என்ற படத்தின் பக்கா ரீமேக் தான் இப்படம். இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

புட் பால் விளையாட்டின் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் ஹரிஷ் கல்யாண். செக்ஸாலஜி டாக்டராக நடித்துள்ளார் விவேக்.

விவேக்கிடம் ஒரு குடும்பம் குழந்தை பிறக்க சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் விவேக் ஹரிஷ் கல்யாணனை தேடி பிடிக்க அலைந்து அவரை சம்மதிக்கவும் வைக்கிறார்.

ஹரிஷ் கல்யாணம் விந்தணு தானம் செய்ய அதன் பின்னர் என்னவெல்லாம் நடக்கிறது? இவருக்கும் இவருடைய காதலிக்கும் இடையே என்னவெல்லாம் பிரச்சனை ஏற்படுகிறது என்பது தான் இப்படத்தின் கதைக்களம்.

கதை ஓகே… ஆனால் இதெல்லாம் ரொம்ப மோசம் – வால்டர் விமர்சனம்.!

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

ஹரிஷ் கல்யாண் வழக்கம் போல தன்னுடைய ஸ்மார்ட்டான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்.

விவேக் தன்னுடைய காமெடியால் யாரை புண்படுத்தாமல் சிரிக்க வைக்கிறார், சில இடங்களில் சிந்திக்கவும் வைக்கிறார்.

மற்ற நடிகர் நடிகைகள் அனைவருமே அவர்களின் வேலையை கச்சிதமாக செய்து கொடுத்துள்ளார்.

தொழில் நுட்பம் :

இசை :

தாராளபிரபு டைட்டிலுக்கு ஏற்றார் போலவே ஒரு படத்தில் கிட்டத்தட்ட 8 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளார். இசையும் சூப்பராக கை கொடுத்துள்ளது.

ஒளிப்பதிவு :

செல்வகுமார் தன்னுடைய ஒளிப்பதிவில் அசத்தியுள்ளார்.

எடிட்டிங் :

க்ரிபாகரனின் எடிட்டிங் சூப்பர். இன்னும் சில காட்சிகளில் கத்தரி போட்டிருந்தால் செம ஷார்ப்பாக இருந்திருக்கும்.

இயக்கம் :

விக்கி டோனர் என்ற சமூக கருத்துள்ள படத்தை கையில் எடுத்து அதை அழகாக நமக்கு ஏற்றார் போல கச்சிதமாக ரீமேக் செய்துள்ளார் கிருஷ்ணா மாரிமுத்து.

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் கதைக்களம்
2. ஹரிஷ் கல்யாண் நடிப்பு
3. விவேக்கின் காமெடி
4. இயக்கம்
5. இசை
6. சமூக கருத்து

தம்ப்ஸ் டவுன் :

1. சிறு சிறு லாஜிக்கல் தவறுகள்

REVIEW OVERVIEW
தாராள பிரபு விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
dharala-prabhu-movie-review-2 மொத்தத்தில் தாராள பிரபுவை தாராளமாக பார்க்கலாம்.