Dhanush's Old Photo

17 வருடங்களுக்குமுன்னர் எடுக்கப்பட்ட தனுஷின் புகைப்படத்தை வெளியிட்டு தனுஷ் அப்பாவி போல இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Dhanush’s Old Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இயக்குனர் செல்வராகவனின் உடன் பிறந்த தம்பியான இவர் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் தனுஷ் தற்போது தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார். இவருடைய நடிப்பில் அடுத்ததாக ஜகமே தந்திரம், கர்ணன் என இரண்டு பெரிய படங்கள் வெளியாக உள்ளன.

ஜகமே தந்திரம் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படம் நெட்பிளிக்ஸ் வழியாக வெளியாக உள்ளது. அதே போல் கர்ணன் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இந்த இரண்டு படங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது தனுஷின் சகோதரி சமூக வலைதளப் பக்கத்தில் பதினேழு வருடங்களுக்கு முன்னர் தனுஷுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு பார்க்க தனுஷ் அப்பாவி போலவே இருக்கிறார் என பதிவிட்டுள்ளார். தனுஷின் சகோதரியின் இந்தப் பதிவிற்கு ரசிகர்கள் அவருடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.