Dhanush Villian in Arun Vijay Movie

அருண் விஜய் நடிக்க உள்ள படத்தில் தனுஷ் படத்தில் வில்லனாக நடித்த ஜெயபாலன் இணைந்துள்ளார்.

Dhanush Villian in Arun Vijay Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் மலை மலை, இயற்கை, தடையறத் தாக்க திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

இந்நிலையில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க உள்ளதாகவும்,இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகரான யோகி பாபுவும் இந்த படத்தில் இணைந்து நடிக்க உள்ளார். இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆடுகளம்.

இந்தப்படத்தில் தனுஷிற்கு வில்லனாக நடித்து இருப்பார் ஜெயபாலன். இவர் அருண் விஜய் படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்ரம்ஸ் ஸ்டிக்ஸ் புரோடக்சன்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் தொடங்க படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.