Dhanush Thanks to Fans

கர்ணன் திரைப்படம் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Dhanush Thanks to Fans : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கர்ணன். பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இந்த படத்தினை இயக்கி இருந்தார். ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் படத்தை பாராட்டி நல்ல விமர்சனத்தை அளித்து வருகின்றனர்.

படமும் தொடர்ந்து வசூல் வேட்டையாடி வருகிறது. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என தமிழக அரசு அறிவித்திருந்து இருந்தும் படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. அசுரன் படத்தைவிட கர்ணன் தனக்கு நல்ல லாபத்தை கொடுத்திருப்பதாக தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார்.

இந்த நிலையில் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். இவருடைய இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. ரசிகர்களும் இதுபோன்ற படங்களை தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் என கமெண்ட்டுகளில் கூறி வருகின்றனர்.