Dhanush thanks fans for Pudupettai Selvaraghavan | Yuvan | Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Sneha | Kollywood

Dhanush thanks fans for Pudupettai :

ட்வீட் செய்த தனுஷ், இந்த கிளாசிக் படத்தில் நடித்ததில் எனக்கு எப்போதும் பெருமை. இதை கொண்டாடிவரும் ரசிகர்களுக்கு நன்றி என்றார்.

தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பெற வேண்டும் என்றால் கம்பீர உடற்கட்டும், வசீகர தோற்றமும் வேண்டும் என்ற தமிழ் சினிமாவின் தொன்று தொட்ட இந்த மரபை உடைத்தெறிக்கும் விதமாக புது நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிமுகமானவர் தனுஷ்.

ஆரம்பத்தில் இருந்தே தன்னை பின் தொடர்ந்து வரும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் புறம்தள்ளிவிட்டு தனக்கான எல்லையை விரித்துக் கொண்டே செல்லும் தனுஷ்,

அரைகுறை உடையில் எமி ஜாக்சன் – வைரலாகும் புகைப்படம்!

அதன் மூலம் ஹீரோவுக்கான இலக்கணங்களை உடைத்தெறிந்து, திறமை உள்ள எல்லோருமே ஹீரோக்கள்தான் என்பதை ஆணித்தரமாக நிருபித்துள்ளார்.

மேலும் கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட், ஹாலிவுட் என இவருடைய பயணம் தற்போது வேற லெவலில் உள்ளது.

இவர் எத்தனை படங்களில் நடித்தாலும் புதுப்பேட்டை தான் இவருடைய ஆல் டைம் பெஸ்ட் என்பது பலரது கருத்து. அப்படிப்பட்ட படம் வெளியாகி நேற்றோடு 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி தீர்த்துள்ளார்கள். இதை முன்னிட்டு ட்வீட் செய்த தனுஷ்,

இந்த கிளாசிக் படத்தில் நடித்ததில் எனக்கு எப்போதும் பெருமை. இதை கொண்டாடிவரும் ரசிகர்களுக்கு நன்றி என்றார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.