Dhanush Next Movie

Dhanush Next Movie : தனுஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத கூட்டணியாக அடுத்த படத்தின் அறிவிப்பு உள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என கோலிவுட் ஹாலிவுட் வரை வெற்றி கண்டவர் தனுஷ்.

இவரது நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா, மாரி 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்த வெளியாக உள்ளன.

இந்த படங்களை தொடர்ந்து தனுஷ் ராட்சசன் படத்தின் இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது திடீரென ரசிகர்கள் எதிர்பாராத கூட்டணி அமைந்துள்ளது. இதனை நடிகர் தனுஷே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டீவீட்டில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகி இருந்த பரியேறும் பெருமாள் படத்தை பார்த்து வியந்ததாக கூறி ஒட்டு மொத்த டீம்-க்கும் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய அடுத்த படத்தை தாணுவின் வி-கிரியேஷன் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தை மாரி செல்வராஜ் தான் இயக்க உள்ளார் என்பதை தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.