Dhanus Mari Selvaraj Second Movie

கர்ணன் திரைப்படம் கொடுத்த வெற்றியின் காரணமாக மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் தனுஷ்.

Dhanush Mari Selvaraj Second Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷ் அடுத்தடுத்து பல இயக்குனர்களின் இயக்கத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து இவர் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் pre-production வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்த மாதம் முதல் நாள் சூட்டிங் தொடங்கும் என நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.