Dhanush in Upcoming Movie Director

நடிகர் தனுஷின் அடுத்தப் படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Dhanush in Upcoming Movie Director : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள கர்ணன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தினை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் தனுஷ் 40 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தினை கார்த்திக் நரேன் இயக்குகிறார். இதில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் தனுஷ் நடிப்பில் மீண்டும் நானே வருவேன் என்ற திரைப்படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். மேலும் ராட்சசன் பட இயக்குனர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக இளம் இயக்குனரான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ராக்கி என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். ஆனால் அந்த படம் தற்போது வரை வெளியாகவில்லை.

ராக்கி திரைப்படத்தை தொடர்ந்து தற்போது செல்வராகவன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வரும் சாணி காகிதம் இந்த படத்தினை இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக கூறப்படும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.