Dhanush in D43 Update
Dhanush in D43 Update

கார்த்திக் நரேன் படத்தில் தனுஷ் மேற்கொள்ள உள்ள செயல் ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.

Dhanush in D43 Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் வலம் வருகிறார்.

தளபதி 65 குறித்து வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு – வீடியோவை வைரலாக்கி கொண்டாடும் ரசிகர்கள்!

இவர் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்ததும் ரிலீஸாக உள்ளது.

மேலும் இந்த படத்தை தொடர்ந்து அவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள D43 திரைப்படம் உருவாக உள்ளது.

கார்த்திக் நரேன் தனுஷ் கூட்டணியில் இப்படம் முதல் முறையாக உருவாக இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைக்கும் வகையில் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

தனுஷின் ஜகமே தந்திரம் எப்போது ரிலீஸ்? டைமிங்கில் ரைமிங்காக வந்த அசத்தல் அப்டேட்.!

அதாவது இப்படத்தில் நடிகர் தனுஷ் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். தனுஷ் கை வைத்தாலே பாடல்கள் ஹிட்டாகி விடும் என்பதால் இந்தப் பாடல்களின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

மேலும் இப்படத்தில் இடம்பெறும் இன்னொரு பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். மேலும் ஒரு பாடல் எழுதப் பட உள்ளதாம். அந்தப் பாடலை எழுத போவது யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.