Dhanush in Aayirathil Oruvan 2 Poster

தனுஷ் அகோரியாக மாறி இருப்பது போன்ற போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Dhanush in Aayirathil Oruvan 2 Poster : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். செவன் ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன் என வித்தியாசமான காதல் கதைகளை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் செல்வராகவன்.

இவரது இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ஜீவி பிரகாஷின் இசையில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி சுமாரான வரவேற்பையும் வசூலையும் பெற்றவர்கள் படம் ஆயிரத்தில் ஒருவன். ஆனால் இந்த திரைப்படம் தற்போது அனைவராலும் கொண்டாடப்படும் படமாக உருமாறிவிட்டது.

தற்போது ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார் செல்வா.. ஆனால் இப்படத்தில் கார்த்திக்கு பதிலாக தனுஷ் நடிக்க ஜிவி பிரகாஷ்க்கு பதிலாக யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

இப்படம் வரும் 2024 ஆம் ஆண்டுதான் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதற்கு முன்னதாக தனுஷை வைத்து கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார் செல்வராகவன்.

இந்த நிலையில் தற்போது தனுஷ் அகோரியாக மாறியிருக்கும் போஸ்டர் ஒன்றை ரசிகர்கள் அவர்களது கைவண்ணத்தில் உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டர் இயக்குனர் செல்வராகவன் மட்டுமல்லாமல் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. தனுஷ் இந்த போஸ்டரில் செம மாஸாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ஜகமே தந்திரம், கர்ணன், கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் 43 உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் மார்ச் 26ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் இணையதளம் வழியாக வெளியாக உள்ளது.

அதேபோல் பரியேறும் பெருமாள் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.