தேசிய விருது குறித்து நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Dhanush About National Awards : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் வெற்றிமாறனுடன் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய மூன்று படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்து நடித்திருந்த படம் அசுரன்.

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் ஜி. வி பிரகாஷ் இசையில் வெளியான 100 நாட்களுக்கு மேலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் அசுரன். தற்போது இந்த படத்திற்கு தேசிய விருதும் தனுஷ்க்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது.

தற்போது தனக்கு கிடைத்த தேசிய விருது குறித்து பதிவு செய்துள்ளார் நடிகர் தனுஷ்‌. அதாவது அவர் வெற்றி மாறன், கலைப்புலி எஸ் தாணு, அசுரன் படக்குழு என அனைவருக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.