Dhanush 43 Update
Dhanush 43 Update

கரோனா வைரஸ் பயத்திற்கு நடுவிலும் தனுஷ் படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Dhanush 43 Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து இளம் இயக்குனரான கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

கரோனா வைரஸால் திரையுலகம் முடங்கிப் போயிருக்கும் இந்த வேலையில் தனுஷ் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் வேகமாக நடந்து வருவதாக கார்த்திக் நரேன் கூறியுள்ளார்.

இந்தியாவில் இயல்புநிலை திரும்பிய பிறகு இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.