DhaDha 87 Telungu Remake Announcement

தாதா 87 திரைப்படம் தமிழில் நல்ல வெற்றி பெற்றதை தொடர்ந்த தெலுங்குவில் இப்படம் ரீமேக் ஆக இருப்பதாக படத்தின் இயக்குனர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

DhaDha 87 Telungu Remake Announcement : தமிழ் சினிமாவில் விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் 87 வயதான சாருஹாசன் நாயகனாக நடித்த திரைப்படம் தாதா 87. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா அவர்கள் நடித்திருந்தார்.

மேலும் அறிமுக நடிகை ஒருவர் திருநங்கையாக துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். இவருடைய இந்த கதாபாத்திரம் திரையுலகில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

அஜித்தின் விஸ்வாசம் படத்தை பார்த்து பிடிக்கவில்லை என சொன்ன பிரபல முன்னணி நடிகர்! – யார் தெரியுமா?

ஒரு நடிகை அதுவும் அறிமுக நடிகை இப்படி ஒரு கதாபாத்திரத்தின் துணிந்து நடித்திருந்தது ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதனால் இப்படம் நல்ல ஒரு வெற்றியைப் பெற்றது.

தற்போது தமிழ் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இப்படம் தெலுங்கிலும் ரீமேக் ஆக இருப்பதாக விஜய் ஸ்ரீ ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

Dha Dha 87

மேலும் தெலுங்கு வெர்ஷனை அவரே இயக்க இருப்பதாக கூறியுள்ளார். தமிழில் ஆதரவு கொடுத்தது போல தெலுங்குவிலும் மக்கள் ஆதரவு கொடுப்பீர்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் தற்போது பொல்லாத உலகின் பயங்கர கேம் பப்ஜி என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.