பிரபு தேவா, தமனா நடிப்பில் வெளியாகி உள்ள தேவி 2 படம் எப்படி இருக்கு? பயம் காட்டும் பேய் படமா? இல்லையா என்பதை வாங்க பார்க்கலாம்.
Devi 2 Review : ஏ.எல் விஜய் இயக்கத்தில் பிரபதேவா, தமனா, கோவை சரளா, ஆர்.ஜே பாலாஜி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் தேவி 2. இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.
படத்தின் கதைக்களம் :
தேவி 1 பாகத்தில் திருமணமான பிரபு தேவாவும் தமன்னாவும் வேலைக்காக குழந்தையுடன் மொரீசியஸ் செல்கின்றனர்.
அங்கு வாழ்க்கை ஸ்மூத்தாக சென்று கொண்டிருக்க திடீரென பிரபு தேவாவுக்கு பேய் பிடித்து விடுகிறது, ஒரு பேய் இல்ல இரண்டு மூன்று பேய்கள் அவருக்குள் சென்று அவரை தொல்லை செய்கின்றன.
இதனால் தமன்னா கோவை சரளாவின் உதவியை நாடுகிறார், அந்த பேய்களிடம் இருந்து தன்னுடைய கணவரை காப்பாற்ற போராடுகிறார். இறுதியில் என்னவானது? பிரபு தேவா எப்படி மீண்டு வருகிறார்? என்பது தான் இப்படத்தின் கதை.
படத்தை பற்றிய அலசல் :
நடிப்பு :
பிரபு தேவா மிகவும் இளமையான தோற்றத்தில் துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்திழுத்துள்ளார். முதல் பாகத்தில் கிளாமராக நடனமாடி இருந்த தமனா இந்த படத்தில் குடும்ப பெண்ணாக சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.
ஆர்.ஜே பாலாஜி மற்றும் கோவை சரளாவின் நடிப்பு நம்மை சிரிக்க வைப்பது உறுதி.
தொழில் நுட்பம் :
இசை :
சாம் சி.எஸ்-இன் அலட்டல் இல்லாத இசை நம்மை ரசிக்க வைப்பதோடு மட்டுமில்லாமல் படத்திற்கு மிக பெரிய பலமாக அமைந்துள்ளது. பாடல்கள் அமைந்த இடம் சரியில்லையோ என தோன்றுகிறது.
ஒளிப்பதிவு & எடிட்டிங் :
போஸ் என்பவரின் ஒளிப்பதிவு ஓகே. எடிட்டர் ஆண்டனி படத்திற்கு எந்தந்த காட்சிகள் தேவையோ அதை மட்டும் வைத்து சிறப்பான படமாக கொடுத்துள்ளார்.
தம்ப்ஸ் அப் :
1. பிரபு தேவாவின் எதார்த்தமான நடிப்பு
2. ஆர்.ஜே பாலாஜி, கோவை சரளாவின் காமெடிகள்
3. சர்ப்ரைஸ் நிறைந்த திரைக்கதை
தம்ப்ஸ் டவுன் :
1. ஒளிப்பதிவில் போஸ் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் ஒரு சில இடங்களில் தெரிந்த தவறுகளும் தெரியாமல் போயிருக்கும்.
மொத்தத்தில் தேவி 2 பயமில்லாமல் பார்த்து ரசிக்க ஏற்ற பேய் படம்.