Details of Valimai Bike Accident

பைக் விபத்தில் அஜித் சிக்கியது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Details of Valimai Bike Accident : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இயக்குனர் வினோத் இயக்கி வரும் இந்தப் படத்தில் அஜித் ரிஸ்க்கான காட்சிகளில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது விபத்தில் சிக்கியுள்ளார்.

அதாவது பைக்கில் ரிஸ்க்கான காட்சிகளில் நடித்தபோது வீலிங் செய்துள்ளார். அப்போது தவறி கீழே விழுந்த அதில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அவரது கை பைக் சைலன்சரில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து படக்குழு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளது. பிறகு நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியும் அஜித் தனக்கான காட்சிகளை நடித்துக் கொடுத்த பிறகே சென்னை திரும்பியுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளன.