Details of PRO Yuvaraj
Details of PRO Yuvaraj

புலி படத்தின் மூலம் பி ஆர் ஓ-வாக அறிமுகமாகி அதன் பின்னர் கிடுகிடுவென உச்சம் பெற்றவர் யுவராஜ். இவரைப் பற்றிய இன்னும் நிறைய தகவல்களை பார்க்கலாம் வாங்க.

Details of PRO Yuvaraj : தமிழ் சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழ் சேனலில் கடந்த 2009ஆம் ஆண்டு மக்கள் தொடர்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் யுவராஜ்.

அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு இறுதியில் வெள்ளித் திரையின் முன்னணி நடிகரான தளபதி விஜயின் முன்னாள் மக்கள் தொடர்பாளரான பிடி செல்வகுமார் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றத் தொடங்கி அடுத்த கட்டத்திற்கு முன்னேறினார்.

சிம்புவின் முதல் படமான காதல் அழிவதில்லை படத்தின் வசூல் என்ன?? பட்ஜெட் என்ன தெரியுமா? – இதோ முழு விவரம்!

அதன் பின்னர் அவருடன் இணைந்து நான்கு வருடங்கள் பணியாற்றினார். இந்த நான்கு வருடத்தில் கிட்டத்தட்ட 40 முதல் 50 படங்களில் யுவராஜ் பணியாற்றியிருந்தார்.

அதன் பின்னர் பிஆர்ஓ ஆவதற்கான தகுதி பெற்ற இவர் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிஆர்ஓ யூனியனில் உறுப்பினராக இணைந்தார். தளபதி விஜயின் நடிப்பில் வெளியான புலி படத்திற்கு முதல் முறையாக மக்கள் தொடர்பாளராக பணியாற்றினார்.

புலி படத்திற்காக இவர் பயன்படுத்திய விளம்பர யுக்திகளால் சினிமாவில் நம்பிக்கைக்குரிய ஒருவராக தடம் பதித்தார். அதன் பின்னர் பிடி செல்வகுமார் மற்றும் டைமண்ட் பாபு ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.

அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தயாரிப்பாளர்கள் யுவராஜை நம்பி படங்களை விளம்பரப்படுத்த தொடங்கினர். அட்டி என்ற படத்தின் மூலம் தன்னுடைய திறமையை மீண்டும் ஒரு முறை நிரூபணம் செய்தார் யுவராஜ்.

இப்படத்தை தொடர்ந்து ஜீவா, நயன்தாரா இணைந்து நடித்த திருநாள் திரைப்படத்தில் மக்கள் தொடர்பாளராக பணியாற்றினார். அதன்பின்னர் தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாரான விக்ரமின் இருமுகன் படத்தில் பணியாற்றினார்.

இந்த படத்தின் மூலம் யுவராஜின் ஈடுபாடு பிடித்துப் போய் விக்ரம் தன்னுடைய அனைத்து படங்களின் மக்கள் தொடர்பாளராக பணியாற்றும் வாய்ப்பை அளித்தார்.

அதன் பின்னர் கௌதம் கார்த்திக்கின் ஹர ஹர மஹாதேவகி, ஜெயம் ரவியின் டிக் டிக் டிக், விஜய் சேதுபதியின் ஜூங்கா ஆகிய படங்களில் பணியாற்றினார்.

ஜூங்கா படத்தின் மூலம் விஜய் சேதுபதி தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரோடக்ஷன் நிறுவனத்தில் தயாராகும் படங்களில் மக்கள் தொடர்பாளராக யுவராஜை நியமித்தார்‌.

அதுமட்டுமல்லாமல் நடிகர்களில் விக்ரமை தொடர்ந்து ஸ்ருதி ஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஹன்சிகா மோத்வானி, பூஜா குமார், நந்திதா ஸ்வேதா, யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்களின் பர்சனல் மேனேஜராக பணியாற்ற தொடங்கினார். பிரபலங்களுக்கு மட்டுமல்லாமல் பல தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இவர் மக்கள் தொடர்பாளராக பணியாற்றி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் 2015ஆம் ஆண்டு PRO யூனியன் சங்கத்தில் உறுப்பினராக இணைந்த இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு செயலாளராக வெற்றி பெற்றார்.

மீண்டும் 2018 ஆம் ஆண்டு நடந்த பிஆர்ஓ யூனியன் சங்க தேர்தலில் போட்டியிட்டு பொருளாளராகவும் வெற்றி பெற்றார்.

இந்த அனைத்து சாதனைகளையும் செய்து முடித்த யுவராஜுக்கு தற்போது வெறும் 29 வயது தான் ஆகிறது என்பது வியக்கத்தக்க விஷயம் ஆகும்.

உங்கள் ஜாதி வெறியை தூக்கி குப்பையில் போடுங்கள்.. ஜோதிகா முஸ்லீமாக இருந்தாலும் – விஜய் பட தயாரிப்பாளர் பரபரப்பு பேச்சு.!

அவரது அபரிதமான வளர்ச்சி திரையுலகில் பலருக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் கொடுத்துள்ளது. முதலில் கடுமையான உழைப்பு தன்னம்பிக்கை முனை இந்த வெற்றிகள் அனைத்திற்கும் மூல காரணம் என்பது எவராலும் மறுக்க முடியாத ஒன்று.

உழைப்பை வியர்வையாக்கி தன்னம்பிக்கையை முயற்சியாக்கி மேலும் பல சாதனைகளைப் படைக்க கலக்கல் சினிமா அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.