ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது நானில்லை என்ற அதிர்ச்சித் தகவலை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.

Desingu Periyasamy About Rajini Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் இந்த நிலையிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உடன் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தினை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார் என கூறப்பட்டு வந்தது. தேசிய இயக்கத்தில் ரஜினி பார்க்க அனைத்து தரப்பு ரசிகர்களும் உற்சாகமாக காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது இதுகுறித்து இயக்குனர் பெரியசாமி ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சித் தகவல் ஒன்றை ‌ வெளியிட்டுள்ளார்.

அதாவது என்னுடைய அடுத்த படம் பற்றி பரவி வரும் தகவல் உண்மையல்ல. பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம். என்னுடைய அடுத்த படம் பற்றி விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார். ‌