DD in Radhai Photoshoot Photos

கண்ணனின் ராதையாக மாறிய போட்டோ ஷூட் நடத்தி உள்ளார் டிடி.

DD in Radhai Photoshoot Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட வேகத்தில் விவாகரத்தும் செய்து விட்டார்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் வெள்ளித்திரையிலும் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ராதையாக மாறி போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். ராதை சீரிஸ் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

சிம்ரன் உட்பட பல பிரபலங்களையும் இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் கவர்ந்துள்ளது.