தர்ஷனின் வாழ்க்கையில் இருந்து தான் விலகுவதாக அவரின் காதலி சனம் ஷெட்டி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
Darshan girl friend crying for biggboss issue – பிக்பாஸ் வீட்டில் ஷெரினும், தர்ஷனும் நட்பாக பழகி வருகின்றனர்.
ஆனால், அது காதல் எனவும், ஷெரின் இப்படி நடந்து கொள்வதால் தர்ஷனின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுவதாகவும் சமீபத்தில் வனிதா விஜயகுமார் கூறினார்.
இதனால் கோபமடைந்த ஷெரின் வனிதாவிடம் சண்டை போட்டார். எனக்கும், தர்ஷனுக்கும் இடையே இருப்பது நட்பு மட்டும்தான் என அவர் சேரனிடம், சாக்ஷியிடமும் கதறி அழுதார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 3 போட்டியில் தர்ஷனே இறுதி போட்டியாளராக வெற்றி பெறுவார் என பேசப்பட்டு வந்த நிலையில், இந்த விவகாரம் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் வனிதா தொடர்ந்து கூறிவருகிறார்.
அதிர்ச்சி.. எதிர்பாராத எவிக்ஷன் – இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் இவர் தான்.!
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‘தர்ஷன் வாழ்வில் இனிமேல் நான் இல்லை. நான் தர்ஷனுக்கு ஆதரவாக கொடுக்கும் பேட்டிகளை வைத்துதான் தர்ஷனை டார்கெட் செய்வதாக தெரிகிறது. என்னால் அவரின் வெற்றி வாய்ப்பு பாதிக்குமெனில் நான் அவரிடமிருந்து விலகி விடுகிறேன். ஆனால், அவரை எப்போதும் காதலித்துக்கொண்டே இருப்பேன். இதற்கு யாருடைய அனுமதியும் எனக்கு தேவையில்லை’ என கண்ணீர் மல்க அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.