Darbar Movie Review
முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார்.

இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

டெல்லியில் போலீஸ் கமிஷ்னராக பணியாற்றி வருகிறார் ஆதித்ய அருணாச்சலமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் மும்மையில் உள்ள மாபியா கும்பலை ஒழித்து கட்ட இவரை மும்மை கமிஷ்னராக பணிமாற்றம் செய்கின்றனர்.

அதன் பின்னர் என்னவெல்லாம் நடக்கிறது? என்பது தான் இப்படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

1. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை காட்டிய மொத்த வித்தையையும் ஒரே படத்தில் காட்டி மிரட்டியுள்ளார். ஒவ்வொரு காட்சிக்கும் விசில் பறக்கின்றன.

2. விறுவிறுப்பாக கதையில் அவ்வப்போது அழகு தேவதையாக வந்து அசத்தி விட்டு செல்கிறார் நயன்தாரா.

3. நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மோஷனல் காட்சிகளில் நம்மை கலங்க வைக்கும் அளவில் நடிப்பை அள்ளி தூவியுள்ளார்.

4. யோகி பாபுவின் காமெடி பெர்பக்ட். குறிப்பாக ரஜினியை கலாய்த்து கவுண்டர் கொடுக்கும் காட்சிகளிலும் ரஜினி கொடுக்கும் பதிலும் தியேட்டரை கலகலவென சிரிக்க வைக்கிறது.

5. முதல் பாதியில் பெரிய அளவில் ஸ்கோப் இல்லாத வில்லன் சுனில் ஷெட்டி இரண்டாம் பாதியில் ரஜினிக்கு ஈடு கொடுத்து நடிப்பில் மிரட்டியுள்ளார்.

தொழில்நுட்பம் :

இசை :

அனிருத்தின் பிஜிஎம் அனல் பறக்கியது, பாடல்கள் பட்டய கிளப்ப தியேட்டர் கிழிக்கிறது. திருநங்கைகள் பாடிய பாடல் அற்புதம்.

ஒளிப்பதிவு :

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவை பற்றி சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு காட்சியையும் அழகாக படமாக்கியுள்ளார்.

எடிட்டிங் :

ஸ்ரீகர் பிரசாந்தின் எடிட்டிங் கச்சிதம்.

இயக்கம் :

முருகதாஸ் ஒவ்வொரு காட்சியையும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார். முதல் பாதியில் வில்லத்தனம் கலந்த ரஜினியாக காட்டி மிரட்டியுள்ளார். இரண்டாம் பாதியில் எமோஷனல் காட்சிகளில் கட்டி போடுகிறார்.

தம்ப்ஸ் அப் :

1. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பு
2. யோகி பாபு காமெடி
3. ம்யூசிக்
4. ஒளிப்பதிவு
5. பாடல்கள்

தம்ப்ஸ் டவுன் :

1. குறை என சொல்ல பெரிய அளவில் ஒன்றும் இல்லை

2. சில இடங்களில் மட்டும் அருணாச்சலம் படத்தின் ம்யூசிக் கேட்பது போல ஒரு பீலிங். ஆனால் அதுவும் அற்புதம்.

REVIEW OVERVIEW
தர்பார் விமர்சனம்
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.
darbar-movie-reviewமொத்தத்தில் தர்பார் ரஜினி ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்