Daniel in Maanaadu Movie

சிம்புவின் மாநாடு படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார் என்பது புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.

Daniel in Maanaadu Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிக்க பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர் உட்பட பல முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும் ஆகாஷ் அரவிந்த் படத்தில் இணைந்து இருப்பதாக வெங்கட்பிரபு புகைப்படங்கள் மூலமாக தெரியப்படுத்தி இருந்தார்.

அவரைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் பிரபலமும் பிரபல காமெடி நடிகருமான டேனியல் இணைந்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.