Dagaalty First Look
Dagaalty First Look

பிரம்மாண்ட பொருட்செலவில் சந்தானம் நடித்து வரும் டக்கால்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

Dagaalty First Look : தமிழ் சினிமாவில் கமெடு நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று ஹீரோவாக வெற்றி நாயகனாக ஜொலித்து வருகிறார் சந்தானம். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்து தில்லுக்கு துட்டு 2 திரைப்படம் நல்ல வசூல் வேட்டையாடி இருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து ஷங்கரின் உதவி இயக்குனரான விஜய் ஆனந்த் இயக்கத்தில் டகால்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தை காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படமாக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறார் டாக்டரும் தயாரிப்பாளருமான எஸ்.பி சௌத்ரி.

முதல் முறையாக இந்த படத்தில் சந்தனத்துடன் யோகி பாபுவும் இணைந்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சம் தொட்டுள்ளது.

இந்த படத்தின் மூலமாக பின்னணி பாடகர் விஜய் நாராயணன் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். மேலும் இப்படத்தில் ராதாரவி, ரேகா, சந்தானபாரதி, மனோபாலா மற்றும் பலர் நடிக்கின்றனர். முக்கிய நடிகர் ஒருவர் வில்லனாக மிரட்ட உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.