Dade Saheb Phalke Award to Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு உயரிய விருதான தாதே சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Dade Saheb Phalke Award to Rajinikanth : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் 50 வருடங்களுக்கு மேலாக தன்னுடைய பங்களிப்பை வழங்கி வருகிறார். இதுவரை இவர் 165 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரஜினிகாந்த்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவருடைய திரையுலக பங்களிப்பை பாராட்டும் வகையில் உயரிய விருதான தாதே சாகேப் பல்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள், திரையுல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் என பலர் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.