D43 Movie Pooja Update

தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் இணையும் படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

D43 Movie Pooja Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

அதுமட்டுமல்லாமல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 என்ற பெயரிடப்படாத படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்குவது எப்போது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது வரும் டிசம்பர் மாத இடையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் டெல்லியில் தொடங்கும் என கூறப்படுகிறது. இதனால் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.