CWC Pugazh In Arun Vijay Movie

அருண் விஜய் நடிக்கும் படத்தில் குக் வித் கோமாளி புகழ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CWC Pugazh In Arun Vijay Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் முதல் சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 2-வது சீசன் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

அதில் கோமாளியாக பங்கேற்றுள்ள புகழ் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே பெற்றுள்ளார்.

இவருக்கு படவாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அருண் விஜய் படத்தில் நடிக்கவுள்ளார்.

அருண் விஜய் நடிப்பிலும், ஹரி இயக்கத்திலும், வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் புகழ் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பை படக்குழு தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.