CWC Pavithra Crush on STR and Ajith

எனக்கு தல அஜித் மற்றும் சிம்புவை பிடிக்குமென கூறியுள்ளார் பவித்ரா.

CWC Pavithra Crush on STR and Ajith : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது சீசன் தொடங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அதில் கோமாளியாக கலந்து கொண்டுள்ள புகழ், பாலா, மணிமேகலை சிவாங்கி இவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

இது மட்டுமில்லாமல் குக்காக பங்கேற்ற பவித்ரா, கனி, பாபா பாஸ்கர், அஸ்வின், ஷகிலா ஆகியோர் பங்கேற்று பார்ப்பவர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பவித்ரா ரசிகர் கேள்விக்கு மனம் திறந்து பதில் அளித்துள்ளார். அதாவது ரசிகர் ஒருவர் உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு பவித்ரா எனக்கு தல அஜித் மற்றும் சிம்புவை ரொம்ப பிடிக்கும், அவர்கள் மேல தான் கிரஷ் என்று பதிலளித்துள்ளார்.