CWC Ashwin Upcoming Movies

நடிகர் அஸ்வின் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

CWC Ashwin Upcoming Movies : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். ஏற்கனவே வெள்ளித்திரையில் சீரியல்களில் நடித்துள்ளார்.

மேலும் சில ஆல்பம் பாடல்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என கூறப்படுகிறது.

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் இவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது விஜயின் மேனேஜர் ரியாஸ் தான் இவருக்கு மேனேஜராக பணியாற்றி வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.