சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கமல்ஹாசனை ஆயிரத்து 1500க்கும் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார் வானதி சீனிவாசன்.

Covai South Election Results : தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுக்கள் இன்றைய மே 2ம் தேதி எண்ணப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை தற்போது வரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் ஸ்டாலின் தலைமையிலான திமுக தனி பெரும்பான்மையான தொகுதிகளுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இருந்து அரசியலில் நுழைந்த உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் கோவை தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டார்.

இதில் உலக நாயகன் கமல் ஹாஸன் மற்றும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிஜேபி வானதி ஸ்ரீனிவாசன் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே முன்னணியில் இருந்து வந்த கமல்ஹாசன் மதியத்திற்குப் பிறகு பின்னுக்கு தள்ளப்பட்டார். அதன் பின்னர் கமல் மற்றும் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் 1489 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல் எதிர்த்துப் போட்டியிட்ட பிஜேபி வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதால் இந்த தேர்தலின் மூலம் தமிழகத்தில் 4 எம்எல்ஏக்கள் ஐ பெற்றுள்ளது பாஜக.