கொரானா தடுப்பூசி குறித்து அவதூறாகப் பேசியதாக மன்சூர் அலிகானுக்கு ரூபாய் இரண்டு லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Court Warning to Mansoor Alikhan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விவேக். இவர் இரு வாரங்களுக்கு முன்னர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விவேக் அவர்கள் உயிரிழப்பதற்கு முந்தைய நாள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டார்.

அவருடைய மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் என பலரும் கூறிய நிலையில் சுகாதாரத்துறை மரணத்திற்கும் தடுப்பு தீர்க்கும் சம்பந்தமில்லை என விளக்கம் அளித்தது. இருப்பினும் நடிகர் மன்சூர் அலிகான் தடுப்பூசி தான் காரணம் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால் கொரானா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வடபழனி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மன்சூர் அலிகானுக்கு ரூபாய் இரண்டு லட்சம் அபராதம் விதித்து முன் ஜாமீன் அளித்துள்ளது.

மன்சூர் அலிகான் ரூபாய் 2 லட்சத்தை சுகாதாரத்துறைக்கு கொரானா தடுப்பூசி வாங்குவதற்காக அளிக்க வேண்டும். இனி தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு முன்ஜாமீன் அளித்து உச்சநீதிமன்றம்.