Vanitha and Peter Paul

வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் ஆகியோர் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Court Order to Vanitha Vijayakumar : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். விஜயகுமாரின் மகளான இவர் சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

அதன் பின்னர் பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த வனிதா உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பரபரப்பாக பேசப்படும் நபர் ஆனார்.

இதனையடுத்து இவர் தனக்கென ஒரு யூடியூப் சேனலை தொடங்கினார். இந்த யூடியூப் சேனலுக்கு உதவியாக இருந்தார் பீட்டர் பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த நிலையில் வனிதா அவரை மணந்து கொண்டார். இதனால் பீட்டர் பால் முதல் மனைவி தன்னிடம் விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால் இவர் புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பீட்டர் பால் மற்றும் எலிசபெத் இருவருக்கும் திருமணம் நடந்ததும் அவர்கள் விவாகரத்து பெறாததற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறி நீதிமன்றம் வனிதா மற்றும் பீட்டர் பாலை வரும் டிசம்பர் 23-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.