Corona Virus Status in Tamilnadu
Corona Virus Status in Tamilnadu

உலக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவலின்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

Corona Virus Status in Tamilnadu : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் கிடுகிடுவென்று அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஆனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம் 4.95% உள்ளது. எந்தெந்த மாநிலங்களில் பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதோ மாநிலங்கள் கொரானா வைரஸ் பரவலை கட்டுக்குள் வைத்துக் கொண்டிருப்பதாக உலக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

TN CM EPS Visit to Ramanathapuram

இதன் மூலம் கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதலில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் திட்டங்களை வகுப்பதிலும் செயல்படுத்துவதிலும் முன்னோடியாக உள்ளது.

மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கிய நகரங்கள், அதிக ஊழியர்கள் வேலை செய்யும் இடங்கள், பொது இடங்களில் மருத்துவ மூகாம்களை நடத்த உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலேயே RT-PCR பரிசோதனை செய்வதில், தமிழகம் முன்னிலை வகிக்கிறது.

சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் முதன்முதலாக சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டன. தொடர்ந்து இங்கு சிறப்பான தனிமைப்படுத்துதலுடன் கூடிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயேயே சிறந்த மருத்துவமனை என விருது பெற்ற அரசு ஓமந்தூரார் மருத்துவமனை 90% நுரையீரல் பாதிப்புடைந்தவர்களையும் கொரோனாவிலிருந்து குணப்படுத்தி சாதனை படைத்துள்ளது.

அம்மா ‘கோவிட்-19’ வீட்டு பராமரிப்பு திட்டத்தில் முதல் நிலை நோயாளிகள் வீட்டில் இருந்து சிகிச்சை பெறும் வசதி, நடமாடும் கொரோனா பரிசோதனை, வீடுகளில் சென்று நேரடியாக உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தல், கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் கொரோனாவை தடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

கொரோனா நோயாளிகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வைட்டமின் நிறைந்த உணவுகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.