நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும் கொரானா பாதிப்பு - தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ் | Corona Virus

Corona Rating in Tamilnadu State : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. தமிழகத்திலும் இதன் தாக்கம் 5,000-க்கும் அதிகமாகவே இருந்து வந்தது.

ஆனால் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்தது. இந்த வைரஸ் தொற்று தமிழகத்தில் இன்னும் சமூக பரவலாக மாறாமல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக தமிழகத்தின் கொரானா பாதிப்பு நான்காயிரத்திற்கும் குறைவாக இருந்து வருகிறது என்பது மகிழ்ச்சியான ஒன்றாக உள்ளது.

தமிழக மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டு வரும் தரமான சிகிச்சை காரணமாக இதுவரை தமிழகத்தில் கொரோனாவில் மீண்டவர்களின் விகிதம் 93% ஆக உள்ளது. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 88.8% மட்டுமே. ஆக தமிழகம் தான் இந்தியாவிலேயே அதிகபட்சமான குணமடைந்தோரின் விகிதத்தில் அதிகமாக உள்ளது.

இதன் மூலமாக இந்தியாவிற்கே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.

இதுவரையில் 6,46,555 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 91 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ச்சியாக கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவருபவர்களை விடக் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

RT-PCR கொரோனா பரிசோதனை செய்வதிலும், தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட முக்கியமான நடவடிக்கைகள் குறித்து பார்க்கலாம் வாங்க.

கொரோனா கட்டுப்பாடு விதிகளை கடைப்பிடிக்கவில்லை என்ற புகாரில், சென்னை தியாகராய நகரிலுள்ள குமரன் சில்க்ஸ் ஜவுளிக் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இது போன்ற தீவிர நடவடிக்கைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது நடந்து வருகிறது.

சென்னையில் 393 காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பது, பொது இடங்களில் எச்சில் துப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

COVOD19 Update 01.09.20

முக்கிய இடங்களில் காவலர்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பொது இடங்களிலும், தெருக்களிலும் தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக அம்மா ‘கோவிட்-19’ வீட்டு பராமரிப்பு திட்டத்தில் முதல் நிலை நோயாளிகள் வீட்டிலிருந்து சிகிச்சை பெறும் வசதி, நடமாடும் கொரோனா பரிசோதனை, வீடுகளில் சென்று நேரடியாக உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்தல், கொரோனா சிறப்புச் சிகிச்சை மையம் கொரோனாவை தடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கிய நகரங்கள், அதிக ஊழியர்கள் வேலை செய்யும் இடங்கள், பொது இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த உள்ளது.