Corona in Karan Johar Family
Corona in Karan Johar Family

போனி கபூரை போலவே புகழ்பெற்ற இயக்குனர் வீட்டிலும் கொரானா புகுந்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Corona in Karan Johar Family : கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் பரவத் தொடங்கிய கொரானா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் அதிகம் மகாராஷ்டிரா மாநிலமும் தமிழகமும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

அஜித், விஜய், ரஜினினு வெறும் 50 பேர் மட்டுமே திரையுலகம் கிடையாது – R.K செல்வமணி அதிரடிப் பேச்சு.!

மக்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்வதே இதிலிருந்து தப்பித்துக் கொள்ள ஒரே வழி என மத்திய மாநில அரசுகள் கூறி வருகின்றன.

இருப்பினும் இந்த கொரானா வைரஸின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் செல்கிறது.

சில வாரங்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள இயக்குனர் போனி கபூர் வீட்டில் வேலை செய்பவர்களில் ஒருவருக்கு கொரானா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் கரண் ஜோகர் வீட்டில் வேலை பார்ப்பவர்கள் இருவருக்கு கொரானா இருப்பது தெரிய வந்துள்ளது.

அறிகுறிகள் தெரிந்ததும் அவர்களைச் சோதித்துப் பார்த்ததில் கரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மரண மாஸாக ரெடியானது வலிமை ஃபர்ஸ்ட் லுக்.. எப்போது ரிலீஸ் தெரியுமா? – வெளியான அசத்தலான அப்டேட்!

மேலும் கரண் ஜோகர் உட்பட வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு சோதனை மேற்கொண்டதில் யாருக்கும் கரோணா என்பது தெரிய வந்துள்ளது.

இருப்பினும் அனைவரும் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்த இருவரும் விரைவில் குணமடைவார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

https://twitter.com/karanjohar/status/1264942040199999490?s=19