Watch VIdeo : – Cooku with Comali Season 2 பிரபலம் Ashwin-க்கு அடித்த Jackpot
Cook With Comali Aswin Emotional on Stage : ஓ காதல் கண்மணி படத்தில் அறிமுகமான அஸ்வின் குறும் படங்களிலும் சின்ன திரைகளிலும் நடித்துள்ளார். எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் வரவில்லை.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் இன்ஸ்டாகிராமில் மில்லியன் ரசிகர்கள் பெற்றதை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் சிவாங்கி மற்றும் அஸ்வின் கெமிஸ்ட்ரி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பிரபல தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தொலைக்காட்சியில் அதிக பிரபலமானவர் என்பதற்கான விருது குக் வித் கோமாளி மூலம் அஸ்வினுக்கு கிடைத்துள்ளது.
இந்நிகழ்ச்சியை புகழ் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்கினார். இதில் புகழ் அஸ்வினிடம் உன் காதலி உன்னை விட்டு சென்றால் உன் உணர்ச்சி எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அஸ்வின் தத்ரூபமான கதறி அழுதுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் சிவாங்கியுடன் நடனமாடிய மற்றும் புகழை கட்டி அணைத்த படி உள்ள புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் தனது இன்ஸ்டாகிராமில் 7 வருட உழைப்பிற்கு கிடைத்த முதல் வெற்றி என்று பதிவேற்றியுள்ளார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.