Cooku With Comali Aswin in Maniratnam Movie

மணிரத்னம் படத்தில் நடித்துள்ளார் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின்.

Cooku With Comali Aswin in Maniratnam Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது.

அதில் குக்காக பங்கேற்று இருப்பவர் அஸ்வின்.இந்த ஷோவில் கலந்து கொண்ட பிறகு அவருக்கு என ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே.

அதுமட்டுமின்றி மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் நடித்துள்ளார் குக் வித் கோமாளி அஸ்வின்.

இந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த ஷோ முடிந்தவுடன் அஸ்வினுக்கு ஹீரோவாக வர நிறைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.