என்னுடைய நீண்ட கால கனவு நிறைவேறியது.., Cooku With Comali Ashwin Opens Up.! | Latest News | Tamil |HD

Ashwin Reach 2 Million in Instagram : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின்.

ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என பல வருடங்களாக போராடி வந்த அஸ்வினுக்கு இந்த நிகழ்ச்சி பெரும் பலமாக அமைந்தது. அவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

CWC Ashwin

இந்த நிகழ்ச்சி மூலம் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இதே திரைப்படத்தில் காமெடியனாக புகழ் நடிக்க உள்ளார். படத்தின் பூஜை நேற்று தான் நடைபெற்றது.

இதுவே அஸ்வின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருந்து வந்த நிலையில் அடுத்து ஒரு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார் அஸ்வின். அதாவது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியனாக உயர்ந்துள்ளது.