VJ Manimegalai
மணிமேகலை சமைக்க போய் வீட்டில் குக்கர் வெடித்து சிதறியுள்ளது. இதனை அவரது கணவர் வீடியோ எடுத்துள்ளார்.

VJ Manimegalai : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வருபவர் மணிமேகலை. இவர் நடன இயக்குனர் உசைன் என்பவரை காதலித்து உறவினர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய வீட்டில் சமைக்கும் பணியாளர் வராததால் தானே சமைக்க முயன்றுள்ளார், அதன் விளைவு குக்கர் வெடித்து சிதறியுள்ளது.

இதனை உசைன் வீடியோவாக எடுக்க மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சமைக்க முயற்சி பண்ணது தப்பா போச்சு. இன்னும் ஒரு வருஷத்துக்கு கிட்சன் பக்கமே போக மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.