Cook With Comali Shivangi About Valimai

வலிமை அப்டேட் கேட்டதற்கு குக் வித் கோமாளி கொடுத்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Cook With Comali Shivangi About Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் தொடங்கி ஒன்றரை வருடங்கள் ஆகியும் இதுவரை எந்தவித தகவலையும் வெளியிடாமல் இருந்து வருகிறது. இதனால் அஜீத் ரசிகர்கள் தொடர்ந்து அனைவரிடமும் அப்டேட் கேட்டு வருகின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில் கூட அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு அதகளம் செய்தனர்.

இப்படியான நிலையில் தற்போது தல அஜித் ரசிகர் ஒருவர் ஷிவாங்கி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வலிமை அப்டேட் கேட்டுள்ளார்.

அதற்கு ஷிவாங்கி எனக்கே தெரியாது ஒருவேளை தெரிய வந்தால் நிச்சயம் உங்களுக்கு சொல்கிறேன் என தெரிவித்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் இவர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள டான் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

https://www.instagram.com/p/CLwrgDjBEqu/?igshid=ouxeu2vbz0vm